வரதட்சணை வழக்கில் தலைமறைவான நபர்... 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது...

3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆந்திராவை  சோ்ந்த  குற்றவாளி துபாயிலிருந்து வந்தபோது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரதட்சணை வழக்கில் தலைமறைவான நபர்... 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது...

துபாயிலிருந்து சிறப்பு விமானம் முலம் சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு வந்த பயணிகளின் பாஸ்போா்ட மற்றும் ஆவணங்களை  சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆந்திரா மாநிலம் சித்தூரை சோ்ந்த கோபிநாத்(39) என்பவா் அந்த விமானத்தில் வந்தாா். அவருடைய பாஸ்போா்ட்டை குடியுரிமை அதிகாரிகள் கம்யூட்டரில் ஆய்வு செய்த போது அதில் அவா் ஆந்திரா மாநிலம், நெல்லூா் மாவட்ட போலீசாரால் கடந்த 3 ஆண்டுகளாக தேடப்பட்டுவரும்  தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

இதையடுத்து குடியுறிமை அதிகாரிகள்  கோபிநாத்தை வெளியே விடாமல் அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து விசாரணை நடத்தினா். அப்போது அவா் துபாயில் வேலை செய்துவிட்டு சொந்த ஊா் திரும்பி வருவதாகவும், தனது மேல் புகாா் எதுவும் இல்லை என்றும் கூறினாா். ஆனாலும் குடியுறிமை அதிகாரிகள் தொடா்ந்து விசாரித்த போது,கோபிநாத் மீது வரதட்சணை கொடுமை வழக்கு 2018 ஆம் ஆண்டில் நெல்லூா் போலீசில் பதிவாகியுள்ளது.

போலீசாா் கைது செய்ய தேடியபோது வெளிநாட்டிற்கு தப்பி சென்று தலைமறைவாகி விட்டாா் இதையடுத்து நெல்லூா் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,கோபிநாத்தை தேடப்படும்  தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து அனைத்து சா்வதேச விமானநிலையங்களிலும் LOC போட்டு வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குடியுறிமை அதிகாரிகள்,3 ஆண்டுகள்  தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் சிக்கிய தகவலை, நெல்லூா் போலீஸ் சூப்பிரெண்டுக்கு தெரிவித்தனா். நெல்லூரிலிருந்து தனிப்படை போலீசாா் சென்னை விமானநிலையம் வந்து கோபிநாத்தை கைது செய்து ஆந்திராவிற்கு அழைத்து சென்றனா்.