சாக்கு மூட்டையில் கட்டி சாலையில் வீசப்பட்ட சடலம்.. கள்ளக்காதலனை கைது செய்து போலீசார் விசாரணை!!

வேடசந்தூர் அருகே பெண்னை வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சடலத்தை வீசி சென்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சாக்கு மூட்டையில் கட்டி சாலையில் வீசப்பட்ட சடலம்.. கள்ளக்காதலனை கைது செய்து போலீசார் விசாரணை!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பூலாங்குளம் என்ற பகுதியில் சாக்குமூட்டையில் ரத்த காயங்களுடன் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்குமூட்டையை பிரித்து பார்த்த போது பெண் என்பதும் கன்னிவாடி அருகே உள்ள கீழதிப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி என்பதும் தெரிய வந்தது.

மேலும் பாண்டீஸ்வரி தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக அமுல்ராஜ் என்பவரைத் திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கஞ்சா கடத்திய  வழக்கில்  அமுல்ராஜ் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தனியாக வசித்து வந்த பாண்டீஸ்வரிக்கு, சேடபட்டியை சேர்ந்த ஹவுஸ் பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இருவரும் சேர்ந்து திருட்டு, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவ்வாறு கிடைக்கும் பணத்தை பங்கு  பிரிப்பதில் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஹவுஸ் பாண்டி,  பாண்டீஸ்வரியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி சாலையோரம் வீசிச் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து  பாண்டீஸ்வரியை கொலை செய்த கள்ளக்காதலன்  ஹவுஸ் பாண்டியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.