சாம்பாரில் வினோத பொருள்; குப்பைக் கிடங்கிற்கு இணையான பிரீசர்; உணவகத்திற்கு நோட்டீஸ்..!

சாம்பாரில் வினோத பொருள்; குப்பைக் கிடங்கிற்கு இணையான பிரீசர்; உணவகத்திற்கு நோட்டீஸ்..!

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல செட்டிநாடு உணவகத்தில் மதியம் அசைவ விருந்து சாப்பிட சென்ற 6 பேருக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

சென்னை தியாகராய நகர் பிஞ்சுளா சுப்பிரமணியன் தெருவில் இயங்கி வருகிறது பிரபல செட்டிநாடு அசைவ உணவகமான ஹோட்டல் விருதுநகர் அய்யனார் உயர்தர செட்டிநாடு உணவகம்.

இதில் இன்று மதியம் 1:30 மணியளவில் ஐடி துறையில் பணிபுரியும் பெண் ஒருவர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் மதிய உணவு சாப்பிட வருகை தந்து உள்ளனர்.

இதில் பலர் கோழி பிரியாணி , சிக்கன் மட்டன் அசைவ சாப்பாடு ஆகியவற்றை ஆர்டர் செய்து உண்டனர். இதில் சம்பந்தப்பட்ட ஐடி பெண் ஊழியர் உட்பட 6 பேருக்கு உடனடியாக வாந்தி மயக்கம் ஏற்பட உணவு சாப்பிட்டவர்களுக்கு உணவின் தரம் குறித்து கேள்வி எழுந்தது.

எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் இன்று மாலை சரியாக 3 மணிக்கு உணவகத்தில் ஆய்வு நடத்தினர்.

பாதிக்கப்பட்டவர்கள் அருந்திய உணவு மற்றும் உணவு தயாரிக்கும் கூடத்தில் நேரில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்  சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இறைச்சி கெட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் அங்கே இருந்த காட்சிகளை கண்டு அதிர்ந்து போனார். மேலும் கடைக்காரரிடம் பல்வேறு கேள்விகளையும் அங்கு இருக்கக்கூடிய காட்சிகளை வைத்து கேட்டார்.

மேலும்,  பரோட்டாவையும் பேப்பர் விழுந்திருந்த சாம்பாரையும் எடுத்து அதில் சாம்பாரை ஊற்றி சாப்பிடுங்கள் சார் என்று கடைக்காரரிடம் கேட்டபொழுது அவர் உண்ண மறுத்துவிட்டார்.

குறிப்பாக அந்த ஓட்டலில் ஆய்வு செய்த பொழுது காலையில் மாவு ஆட்டிவிட்ட கிரைண்டர் மற்றும் சாமான்கள் கழுவும்  இடங்கள் அனைத்தும் அசுத்தமாக இருந்தது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்தை தற்காலிகமாக மூடவும் உரிய விளக்கம் கோரி நோட்டீசும் வழங்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

இதையும் படிக்க:இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல்!