நள்ளிரவில் கணவனுடன் ரெயிலுக்கு காத்திருந்த கர்ப்பிணி மனைவி....கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பல்..!

நள்ளிரவில் கணவனுடன் ரெயிலுக்கு காத்திருந்த கர்ப்பிணி மனைவி....கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பல்..!

இரவில் ரெயிலுக்காக கணவன் மற்றும் 3 குழந்தைகளுடன் காத்திருந்த கர்ப்பிணியை  கடத்தி சென்று 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
Published on

ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் ரிபள்ளி ரெயில் நிலையத்தில், கடந்த சனிக்கிழமை இரவு கணவன், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேரும் வேலை தேடி கிருஷ்ணா மாவட்டம் செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது ரெயில் வருவதற்கு தாமதம் ஆனதால் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனால் நடைமேடையில் உள்ள அமரும் பலகையிலேயே அனைவரும் படுத்து உறங்கினர். அந்த நேரத்தில் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் குடிம்தையில் அங்கு வந்தனர். தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பிய அந்த கும்பல், கர்ப்பிணி பெண்ணின் கணவனை தாக்கியதால், அதை தடுக்க கர்ப்பிணி பெண் முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கர்ப்பிணி பெண்ணை தரதரவென்று இழுத்து சென்று அருகில் உள்ள புதரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனிடையே அந்த கும்பலிடமிருந்து தப்பிய கணவர் போலீசாரின் உதவியுடன் புதரில் கிடந்த மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com