செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை..!

செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை..!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயின்று வந்த நிகில் என்பவர் B.Tech., (Aerospace Engg) 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

அவர் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் அறையில், ஏற்கனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து வைத்திருந்த சோடியம் சல்பேட் என்ற விஷத்தன்மை உடைய பொருளை தண்ணீரில் கலந்து குடித்து விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து அதே அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் SRM கல்லூரி மாணவர் ஆதித்ய சௌத்ரி (21) என்பவருக்கு போன் செய்து தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆதித்ய சௌத்ரி நிக்கிலின் பிளாட்டுக்கு சென்று பார்த்தபோது நிகில் அறையில் படுத்து இருந்ததாகவும், ஆதித்யா செளத்ரி நிகிலின்  பெற்றோருக்கு போன் செய்து நடந்த விவரத்தை சொன்னதாகவும், ஆதித்யா நிகிலுக்கு சோடா உப்பு கலந்து கொடுத்துள்ளார்.

அதன் பிறகு அறையில் இருந்த மற்ற இரு நண்பர்கள் சேர்ந்து எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நிகில் உயிரிழந்தார். மேற்படி மாணவரின் பெற்றோர்கள் மும்பையில் இருந்து வந்து கொண்டிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் தகவலின் விசாரணை செய்து வருகிறார்.