காதல் திருமணம் முடித்த மென்பொருள் பொறியாளர் கழுத்தை நெறித்துக் கொலை!!

தெலங்கானாவில் மகளை காதல் திருமணம் செய்த மென்பொருள் பொறியாளரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் வீட்டார் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

காதல் திருமணம் முடித்த மென்பொருள் பொறியாளர் கழுத்தை நெறித்துக் கொலை!!

ஐதராபாத்தில் உள்ள சின்னாரம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான நாராயண ரெட்டி என்பவர். அதே பகுதியைச் சேர்ந்த ரவளி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதிக்காத நிலையில், தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ரவளியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அவரது பெற்றோர், அன்பாகப் பேசி ஐதராபாத் வரவழைத்துள்ளனர். பின்னர் ரவளியை தனி அறையில் அடைத்து வைத்து, வேறொருவருக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனையறிந்த நாராயண ரெட்டி, ரவளியின் சகோதரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது நாராயண ரெட்டியை மது அருந்த வைத்தவர்கள், பின்னர் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததோடு, பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துள்ளனர். இது தொடர்பாக நாராயண ரெட்டியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.