பஞ்சாப்பை தொடர்ந்து தமிழகத்திலும் அரங்கேறியது...மாணவிகளின் அந்தரங்க வீடியோ விவகாரம்!

பஞ்சாப்பை தொடர்ந்து தமிழகத்திலும் அரங்கேறியது...மாணவிகளின் அந்தரங்க வீடியோ விவகாரம்!
Published on
Updated on
1 min read

மதுரையில் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் அந்தரங்க வீடியோக்களை, மாணவி ஒருவர் மருத்துவருக்கு பகிர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நட்புடன் பழகிய மாணவி, மருத்துவர்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மருத்துவர் ஆசிக் என்பவர், முஸ்லீம் பஜார் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். அதேபகுதியை சேர்ந்த காளீஸ்வரி என்ற மாணவி, மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தனியார் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவியும், மருத்துவரும் பல ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்ததாக தெரிகிறது.  

அந்தரங்க புகைப்படங்களை வைத்திருந்த மாணவி:

இந்நிலையில் விடுதியில் தங்கியுள்ள மற்ற பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது போன்றவற்றை வீடியோ எடுத்த காளீஸ்வரி, அவற்றை மருத்துவருக்கு அனுப்பி வந்துள்ளார். மாணவியின் செயலை கவனித்த பெண் ஒருவர், இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விடுதி காப்பாளர் மாணவியின் செல்போனை வாங்கி பார்த்தபோது, அதில் பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.

கைது செய்த போலீசார்:

இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி மேலாளார், மதுரை அண்ணாநகர் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மருத்துவர் ஆசிக் மற்றும் காளீஸ்வரியை கைது செய்தனர்.

பஞ்சாப்பை தொடர்ந்து தமிழகம்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாப்பில் கல்லூரி மாணவி ஒருவர் சக மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை, அவரது ஆண் நண்பருடன் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டார். தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற செயல் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com