
கடலூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் தனியாக வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ், சபரி மற்றும் கிஷோர் உள்ளிட்ட 3 பேரும் அந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த பெண்ணின் ஆண் நண்பரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.