சினிமா பாணியில் நகை திருட முயற்சித்து கையும் களவுமாக சிக்கிய இளைஞர்  

சென்னை வடபழனியில் சினிமா பாணியில் நகை திருட முயற்சித்து கையும் களவுமாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா பாணியில் நகை திருட முயற்சித்து கையும் களவுமாக சிக்கிய இளைஞர்   

சென்னை வடபழனியில் சினிமா பாணியில் நகை திருட முயற்சித்து கையும் களவுமாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் வானகரத்தை சேர்ந்த சுவேதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவரது அருகில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கழுத்தில் அணிருந்த தங்க சங்கிலியை திருடிக் கொண்டு ஓடியுள்ளார். இதனையடுத்து அவர் கூச்சலிட்ட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து தர்ம அடிக் கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்த் அவர்கள் நடத்திய விசாரணையில் கோவையை சேர்ந்த வினோத் குமார் என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சென்னை வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கையில் பணம் இல்லாததால் சினிமாவை பார்த்து நகையை திருட முயற்சித்ததாக கூறியுள்ளார்.