2 முறை கர்ப்பமடைந்த இளம்பெண்... கருவை கலைத்த விட்டு ’நான் இப்போது மதபோதகர் உன்னை திருமணம் செய்ய முடியாது’ என கூறிய வாலிபர்!

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை 2 முறை கர்ப்பமாக்கிய வாலிபர் ஒருவர் நான் மதபோதகர் உன்னை திருமணம் செய்ய முடியாது என கூறிய சம்பவம் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது.
2 முறை கர்ப்பமடைந்த இளம்பெண்... கருவை கலைத்த விட்டு ’நான் இப்போது மதபோதகர் உன்னை திருமணம் செய்ய முடியாது’ என கூறிய வாலிபர்!
Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பது என்னவென்றால், நான் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருகிறேன். அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆண் ஒருவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அப்படியே தொடர்ந்த நட்பால் ஒருநாள் அவர், என்னுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை நீங்கள் வந்தால் உதவியாய் இருக்கும் என கேட்க நானும் அவர் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் என்னிடம் பாலியல் உறவில் ஈடுபட்டதால், நான் கர்ப்பமடைந்தேன். 

இதையடுத்து உன்னையே நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று அவர் என்னிடம் கூறியதால், நானும் நம்பினேன். அதன்பின்னர் அவர் என்னை சேலம் அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்க வைத்தார். பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் அவர் என்னிடம் உல்லாசமாக இருந்து கர்ப்பமடைந்ததால், முதல்தடவை போன்றே மீண்டும் கருவை கலைத்தார். இதற்கு அவருடைய தந்தையும் உடந்தையாக இருந்தார்.

அதன்பிறகு என்னை திருமணம் செய்து கொள்ள அவரை வற்புறுத்தியதால், அவர் நான் மகாராஷ்டிரா சென்று வேதம் படித்து வருகிறேன் என்று கூறி சென்றுவிட்டார். ஆனால் தற்போது அவர் மதபோதகராக திரும்பி வந்துள்ளார். அவரிடம் சென்று என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு, இப்போது நான் மதபோதகர். உன்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுக்கிறார். அதனால் அவர் மீதும், கர்ப்பத்தை கலைக்க உதவிய அவருடைய தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com