
தென்காசி மாவட்டத்தில் ரயிலில் பயணம் செய்த இளைஞர் சிக்னல் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி பாவூர்சத்திரம் ரயில் நிலையம் தண்டவாளத்தின் அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நபர் யார்?, எவ்வாறு உயிரிழந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்த நபர் நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயிலில் சென்ற போது படிக்கட்டில் நின்று பயணம் செய்து கொண்டிருந்தவர் இளைஞர் என்பதும், தண்டவாளத்தின் ஓரத்தில் இருந்த சிக்னல் கம்பத்தில் தலை மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், உயிரிழந்த வாலிபரின் முகவரி குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.