ஊராட்சி மன்றத் துணைத்தலைவரை தாக்கிய அ.தி.மு.க. கிளைச் செயலாளர்... குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்...

ஊராட்சி மன்றத் துணைத்தலைவரை தாக்கிய அ.தி.மு.க. கிளைச் செயலாளர்.

ஊராட்சி மன்றத் துணைத்தலைவரை தாக்கிய அ.தி.மு.க. கிளைச் செயலாளர்... குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்...

அரக்கோணம் அருகே மழைநீர் கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வற்புறுத்திய துணை தலைவர் மீது அதிமுக கிளை செயலாளர் நடத்திய தாக்குதலில் குழந்தை உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திபுத்தூரில் தேங்கிய மழைநீரை அகற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற துணை தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அதிமுக கிளை செயலாளர் மற்றும் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதில் குழந்தை உட்பட 5 பேர் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதி. 3 பேரை பிடித்து தாலூகா காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம் அடுத்த பருத்திபுத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருப்பவர் சினிவாசன்(35). இன்று மதியம் இவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன்  மேட்டு தெருவில் பல நாட்களாக தேங்கிய மழை நீர் அகற்றுவது குறித்து பார்வையிட்ட போது நீர்வரத்து கால்வாயின் குறுக்கே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீட்டை அகற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

நீர்வரத்து கால்வாயை பருத்திபுத்தூர் அதிமுக கிளை செயலாளர் நாகராஜன் குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த  நாகராஜன் (46) அவரது தம்பி ரவிச்சந்திரன் மற்றும் பலர் கட்டை மற்றும் கற்களை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் சினிவாசன், தந்தை முனிரத்தினம்(69) தாய் துளசி(62) தம்பி கார்த்திகேயன்(33) தம்பி குழந்தை ரோஷினி(2) ஆகியேரர் படுகாயங்களுடன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்கள்.

இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன், குழந்தை ரோஷினி ஆகியோ மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற துணை தலைவர் சினிவாசன் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலூகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரன் அவரது மகன்கள் கௌதம், ராக்கி ஆகியோரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அதிமுக கிளை செயலாளர் நாகராஜன் அவரது தம்பி விஜயன் மற்றும் சுந்தரி ஆகியோரை தேடி வருகின்றனர்.