மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.. மனைவி குழந்தைகள் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்!!

மீஞ்சூர் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.. மனைவி குழந்தைகள் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சிமன்ற தலைவர்மனோகரன். இவர் தமது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு  வீடு திரும் பினார்.அப்போது மர்ம கும்பல் இவரது கார் மீது லாரியை மோதி நிலைகுலைய வைத்தது.

அதன் பின்னர்  மனைவி, குழந்தைகள் கண் முன்னே காருக்குள் வைத்து மனோகரனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அந்த குப்பல் தப் பி சென்றது.

இது குறித்து  தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி   பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப் பியுதுடன் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு மனோகரனின் உடல் சொந்த ஊரான  கொண்டக்கரை கொண்டு வரப்பட்டது. அப்போது வாகனத்தை வழிமறித்து சிலர் ரகளையில் ஈடுபட்டதால்  பதற்றம் நிலவியது. தொடர்ந்து அவர்களை அப்புறப்படுத்திய காவல்துறையினர் சடலத்தை வீட்டிற்கு கொண்டு சென்று  அஞ்சலிக்காக வைத்தனர். அவரது  உடலுக்கு திமுக எம்எல்ஏ கே. பி.சங்கர் மற்றும் கிராம மக்கள்  அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மனோகரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக சார் பில் ஓ பிஎஸ் - ஈ பிஎஸ் கூட்டாக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

விடியா அரசின்  சட்டம் ஒழுங்கு அவலத்தின் உச்சபட்சமாக மனைவி, குழந்தைகள் கண் முன்னே ஊராட்சி மன்ற தலைவர் கொல்லப்பட்டது கண்டிதக்கது என தெரிவித்துள்ளனர். கொலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனையை பெற்று தர அரசு முன் வர வேண்டும் என ஓ பிஎஸ் ஈ பிஎஸ் வலியுறுத்தி  உள்ளனர்.