கள்ளத்தொடர்பால் கல்லூரி துணை முதல்வர் கடத்தல்... சிக்கிய 30 ஆபாச வீடியோக்கள்...

திருச்சியில் கல்லூரி துணை முதல்வர் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்து, மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

கள்ளத்தொடர்பால் கல்லூரி துணை முதல்வர் கடத்தல்... சிக்கிய 30 ஆபாச வீடியோக்கள்...

திருச்சி கருமண்டபம் மாரியம்மன் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விமல் ஆதித்யன். திருமணமாகி மனைவி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.தனியார் கல்லுாரி பேராசிரியராக பணியாற்றி வந்த இவரை ஒழுங்கீன செயல் காரணமாக  கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.இதனையடுத்து பிராட்டியூர் அருகே மற்றொரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றி வருகிறார்.

தான் முதலில் பணியாற்றிய கல்லூரியில் உடன் பணியாற்றி வந்த நிவேதிதாவுடன் விமல் ஆதித்தனுக்கு தொடர்பு இருந்த நிலையில்  நிவேதிதாவிற்கு, விமல் ஆதித்தனே வரன் தேடி துறையூரை சேர்ந்த சசிகுமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு பின்னரும் நிவேதிதா உடன் விமல் ஆதித்தன் தொடர்பில் இருந்து வந்தது கணவர் சசிகுமாருக்கு தொிய வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  சசிகுமார் தன்னுடன் சிலரை சேர்த்து கொண்டு விமல் ஆதித்யனை கடத்தி சென்று தனக்கான திருமண செலவு ரூபாய் 15 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.

அதைத்தொடர்ந்து 2 லட்சம் ரூபாயை மிரட்டலுக்கு பயந்து விமல் ஆதித்தன் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இது போதாது இன்னும் வேண்டும் என்று கேட்டு விமல் ஆதித்தனை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இதனால் தன் கணவருக்கு வந்த பிரச்சினை தீர வேண்டும் என்று விமலின் மனைவி, மேலும் 40 ஆயிரம் மற்றும் சொத்து பத்திரங்களை கொண்டு சென்று சசிகுமாரிடம் கொடுத்து கணவரை மீட்டு வந்துள்ளார். 

இந்நிலையில் திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் விமல் ஆதித்தன் தன்னை சிலர் கடத்தி சென்று பணம் பறித்ததாக புகார் கொடுத்தார். இதனையடுத்து கடத்தல் வழக்கு தொடர்பாக துறையூரை சேர்ந்த சசிகுமார். திருச்சி மிளகுபாறையை சேர்ந்த பிரசாந்த், லாசர் ஆரோக்கியராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

விமல் ஆதித்தனின் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்து சோதனை நடத்தியதில் தன்னுடன் பழகிய பெண்ணுடன் மிக நெருக்கமாக இருக்கும் 30 ஆபாச வீடியோக்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து விமல் ஆதித்யனால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கைதான லாசர் ஆரோக்கியராஜ், மிளகுபாறை பகுதி திமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.