பட்டாக்கத்தியுடன் பதுங்கியிருந்து கும்பல்...தட்டி தூக்கிய தனிப்படை போலீசார்..விசாரணையில் வெளி வந்த உண்மை...!!

சென்னை எண்ணூரில் கொலை வழக்கு உட்பட பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த  சிறுவன் உட்பட 5 குற்றவாளிகளை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்

பட்டாக்கத்தியுடன் பதுங்கியிருந்து கும்பல்...தட்டி தூக்கிய தனிப்படை போலீசார்..விசாரணையில் வெளி வந்த உண்மை...!!

சென்னை எண்ணூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக எண்ணூர் உதவி ஆணையர் கிடைத்த ரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.

அப்போது ஓரு வீட்டில் பதுங்கி இருந்த கார்த்திக் என்கிற புறா கார்த்திக், அஜித், குட்டா என்கிற சதீஷ்குமார், தினேஷ் என்கிற மண்ட தினேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 20-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள், பல்சர் வாகனம், பட்டாக்கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்

விசாரணையை 2015- ஆம் ஆண்டு கைதாகி சிறையில் இருந்த 4 பேரும், கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்து, தங்களது எதிரிகளை பழி தீர்ப்பதற்காக திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கனவே தண்டையார்பேட்டை, சாத்தாங்காடு, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிடிபட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 பேரை புழல் சிறையிலும்  சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்..