பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த ஊழியர்...!

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த ஊழியர்...!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் மச்சிநாதன் மகன் தமிழ்ச்செல்வன்(27). இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். கடலூரில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை கடத்திச் சென்ற தமிழ்ச்செல்வனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க : தஞ்சை : இளைஞர்களை அரிவாளால் வெட்டிய முதியவர்...! சமூகவலைதளங்களில் வைரலான வீடியோ..!