மேலும் ஒரு போக்சோ... வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 15 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் ஒரு போக்சோ... வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை...
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் | பழனி கோரிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில்  பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சரண் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சரண் முருகவேலுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

போக்சோ வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com