மதுபானக்கடையில் தகராறு செய்த ரவுடி கைது...

கொடுங்கையூரில் உள்ள மதுபான கடையில் தகராறில் ஈடுபட்ட ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுபானக்கடையில் தகராறு செய்த ரவுடி கைது...

சென்னை | வியாசர்பாடி பள்ளத்தெரு  பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் 29 இவர் மீது சோழவரம் ரெட்ஹில்ஸ் புழல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள மதுபான கடையில் சரத்குமார் மது அருந்தி கொண்டிருந்தார். மது அருந்திதற்கு மதுகூடத்தில் வேலை செய்தவர்கள் பணம் கேட்டுள்ளனர்.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசுக்கு போட்டியானதா பிரதமரின் காசி தமிழ் சங்கமம்... அமைச்சர் சேகர் பாபு கூறுவதென்ன?!!

அப்போது அவர் கடை ஊழியர்களிடம் நானே பெரிய ரவுடி பணம் தர வேண்டுமா என கேட்டு பாரில் வேலை செய்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் போலீசார சரத்குமாரை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட சரத்குமார் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும் படிக்க | சென்னை விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம்... விமான ஊழியர் கைது!!!