நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் அட்டூழியம்...அரசு பேருந்தை மறித்து போராட்டம்!

நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் அட்டூழியம்...அரசு பேருந்தை மறித்து போராட்டம்!

நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில், அரசு அனுமதியின்றி, கிளை மேலாளர்கள் தன்னிச்சையாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை, இடை நில்லா பேருந்துகளாக ஒட்டி வருவைத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் அரசு பேருந்துகள், அனுமதியின்றி அதிக அளவில் இடைநில்லா பேருந்துகளாக புறவழிச் சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் இடையில் உள்ள பல்வேறு ஊர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து பல முறை புகார் அளித்தும் அதனை அரசு நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர். அரசு அனுமதியின்றி, கிளை மேலாளர்கள் தன்னிச்சையாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை தங்கள் இஷ்டத்திற்கு  ஓட்டி வருவதால், அது தனியார் பேருந்துகளுக்கு சாதமாகமாக அமைந்து விடுகிறது. இதனால் அரசு பேருந்துகள் நஷ்டமடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா திருக்குறுங்குடியைச் சேர்ந்தவர் பூலுடையார்(54). இவர் களக்காடு ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்து வருகிறார்.

இன்று, பூலுடையார், நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனது நண்பர்களுடன், நாங்குநேரிக்கு செல்வதற்காக நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் அங்கிருந்து பேருந்து புறப்பட்டு பாதி வழியில் வரும் பொழுது பூலுடையார் மற்றும் அவரது நண்பர்கள் நாங்குநேரிக்கு டிக்கெட் கேட்டுள்ளனர்.  அதற்கு அந்த பேருந்து நடத்துனர், இந்த பேருந்து நாங்குநேரிக்கு போகாது. இது இடை நில்லா பேருந்து எனக் கூறி வள்ளியூருக்கான டிக்கெட்டை வழங்கி உள்ளார். அந்த பேருந்து நாங்குநேரி செல்லக் கூடியது எனபதால், பூலுடையார் தரப்பினர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனை அடுத்து நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே பேருந்து வந்ததும் பூலுடையார் உள்ளிட்ட நான்கு பேரையும் நடத்துனர்  இறக்கிவிட்டு உள்ளார். இதனை கண்டித்து பூலுடையார் தனது  சகாக்களுடன் பேருந்து முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர் .

மேலும், ஓட்டுனர் நடத்துனரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் ஆளுங்கட்சியின் தொமுச தொழிற்சங்க உறுப்பினர்கள் என்பது தெரியவந்தது. ஆளுங்கட்சியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறையான சீருடை இன்றி திமுக தொழிற்சங்கத்தினர் அடாவடியாக ஈடுபட்டு வருகிறது மக்களை வேதனைக்கு உட்படுத்தி உள்ளது.

இதற்கிடையே காவல் நிலையத்தில் ஓட்டுநர் நடத்துனர் மீது புகார் அளிப்பதாக பூலுடையார் போலீசாரிடம் தெரிவித்தார் . அதனால் போலீசார் நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நாகர்கோவிலில் பயணிகளை இறக்கி விட்ட பின் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தினார். 

இதனை அடுத்து அந்த பேருந்து அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூலுடையார் அளித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க || மக்கள் பயன்பாட்டிற்கு வந்த, "வீடுகளுக்கு நேரடி எரிவாயு இணைப்பு திட்டம்"!