சவாரி கேட்பது போன்று ஆட்டோ ஓட்டுனரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு...

மெரினா பகுதியில் சவாரி கேட்பது போன்று ஆட்டோ ஓட்டுனரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 நபர்களை போலிசார் கைது செய்துள்ளனர். 

சவாரி கேட்பது போன்று ஆட்டோ ஓட்டுனரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு...

மெரினா பகுதியில் சவாரி கேட்பது போன்று ஆட்டோ ஓட்டுனரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 நபர்களை போலிசார் கைது செய்துள்ளனர். 

சென்னை கண்ணகி நகர் பகுதிக்குட்பட்ட எழில் நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் கண்ணன் இவர் ஆட்டோ ஓட்டி தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மயிலாப்பூர் கைலாசபுரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஆட்டோவில் இருந்த போது சவாரி கேட்பது போல் வந்து ஐந்து நபர்கள் கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

 இது தொடர்பாக  கண்ணன் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த வடிவேலன், ராஜீவ்காந்தி, முத்துமணி, அருள், விக்னேஸ்வரன் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி மற்றும் பணத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.