பாஜக மீனவரணி துணைத்தலைவர் வெட்டிக்கொலை...3 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு...

பாஜக மீனவரணி துணைத்தலைவர் வெட்டிக்கொலை...3 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு...

சிவகங்கையில் அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பா.ஜ.க மாவட்ட மீனவரணி துனை தலைவரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்த நிலையில் அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
Published on

சிவகங்கை அடுத்த வைரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி.இவர் பா.ஜ.க சிவகங்கை மாவட்ட மீனவர் அணி துணை தலைவராக இருந்து வருகிறார். சிவகங்கை மதுரை முக்கு பகுகுதியில் தற்சமயம் வசித்து வரும் நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கையில் அரிவாளுடன் வந்ததுடன் முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துப்பாண்டியை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே மருத்துவமனையில் இறந்தவரின் உறவினர்கள் ஏராளமானோர் கூடியதால், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு சமீபத்தில்தான் பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை  மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com