நடிகர் விஜய் குறித்து அவதூறு; பாஜக பெண் நிர்வாகி கைது!

நடிகர் விஜய் குறித்து அவதூறு; பாஜக பெண் நிர்வாகி கைது!

நடிகர் விஜய், பெரியார், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த சனிக்கிழமை 10, 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர் விஜய் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜரை படிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில் இதனை விமர்சிக்கும் விதமாக கோவையை சேர்ந்த பாஜக உறுப்பினர் உமா கார்க்கி டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையொட்டி கோவை சைபர்கிரைம் போலீசார் உமா கார்க்கியை கைது செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவர் ஏற்கனவே ட்விட்டர் சமூக வலைதளத்தில் திமுகவிற்கு எதிராகவும், பெரியார், கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகவும்  பதிவிட்டு  வந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக உமாகார்கிக்கு  சிறந்த செயல்பாட்டாளர்  என பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்து இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இதையும் படிக்க:இன்று சென்னை வருகிறார் ராஜ்நாத் சிங்!