நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!!!- பைக் திருடன் மைண்ட் வாய்ஸ்:

தாம்பரம் அருகே வீட்டில் வெளியே நிறுத்தி வைத்து இருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை பலமணி நேரம் போராடி திருட முடியாமல் திருடின் தவிர்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!!!- பைக் திருடன் மைண்ட் வாய்ஸ்:

சென்னை : சேலையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சேலையூர் கேம்ப் ரோடு  வேளச்சேரி பிரதான சாலையில் வசித்து வருபவர் ஜீவா வயது26. இவர் வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்று விட்டு, இரவு தனது வீட்டின் வெளியே தனது விலையுரந்த  இருசக்கர புல்லட் வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று வழக்கு போல காலையில் வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்தபோது  நிறுத்தி வைத்திருந்த இடத்தை விட்டு வாகனம் தள்ளி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது வீட்டில் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி  காட்சிகளை பார்த்தார். அப்போது, அதில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தை திருடுவதற்கு பல மணி நேரமாக  போராடியது தெரியவந்துள்ளது.

ஆனால், திருட முடியாமல் அங்கிருந்து, பக்கத்தில் உள்ள பெரிய கல்லை எடுத்து வண்டியின் பூட்டை உடைக்க முயற்சி செய்திருக்கிறார். அப்படியும் எதும் நடக்காததால், அங்கிருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.