சென்னையில் 6 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்!  

சுதந்திர தினம் வரவுள்ள நிலையில் வெடிகுண்டு வெடிக்கும் என இ-மெயில் வழியாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 6 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்!   

சுதந்திர தினம் வரவுள்ள நிலையில் வெடிகுண்டு வெடிக்கும் என இ-மெயில் வழியாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.

சென்னையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் உட்பட 6 தனியார் ஹோட்டல்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை தி.நகர் தனியார் ஹோட்டல் உட்பட 6 ஹோட்டல்களில் நடைபெறக்கூடிய வேலைவாய்ப்பு முகாமில் வெடிகுண்டு வெடிக்க போவதாக அந்த தனியார் ஹோட்டலின் இமெயிலுக்கு குறுந்தகவல் ஒன்று இன்று காலை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தனியார் ஹோட்டல் நிர்வாகம் நேரடியாக காவல் ஆணையர் இமெயிலுக்கு அனுப்பி புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இமெயில் வந்த ஐடியை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இன்னும் 3 நாட்களில் சுதந்திர தினம் வர உள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.