கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் குடித்தனம்.. குழந்தை குறித்து டார்ச்சர் செய்ததால் காதலி தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார்.

கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் குடித்தனம்.. குழந்தை குறித்து டார்ச்சர் செய்ததால் காதலி தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லியை சேர்ந்த கற்பகம் என்பவர் கணவரை பிரிந்து தனது மகளுடன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே துணிக்கடையில் வேலை பார்த்த போது ஆகாஷ் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கற்பகம் அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களுக்கு அண்மையில் குழந்தையும் பிறந்த நிலையில், கற்பகம் திடீரென கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் வழக்கை முடித்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த கற்பகத்தின் செல்போனை அவரது தந்தை ஆய்வு செய்ததில், அண்மையில் பிறந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என ஆகாஷ் தகராறில் ஈடுபட்டதும், இதனால் மனமுடைந்த கற்பகம் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.  இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், போலீசார் காதலன் ஆகாஷை கைது செய்தனர்.