புகையிலை மூட்டைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் கைது...

மேலூர் பேருந்து நிலையப்பகுதியில் பயணிகளின் மத்தியில் புகையிலை மூட்டையோடு நின்றிருந்த ராஜஸ்தான் நபர் கைது செய்யப்பட்டார்.

புகையிலை மூட்டைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் கைது...

மேலூர் பேருந்து நிலையப் பகுதியில் சார்பு ஆய்வாளர் சுதன் மற்றும் மாவட்ட எஸ்.பி,யின் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பயணிகளின் மத்தியில் சந்தேகப்படும் படியாக சில மூட்டைகளோடு நின்று கொண்டி ருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் மூடைகளை பிரித்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் அந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் டிட்வானா பகுதியைச் சேர்ந்த சிவ்கரன் என்பவரது மகன் நேமிசந்த் (25) என்பதும் அங்கிருந்து புகையிலை பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்வதற்காக இங்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார். அவரிடமிருந்த சுமார் 58 கிலோ எடை கொண்ட புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.