ஏரிக்கரையில் எரிக்கப்பட்ட மண்டை ஓடு... கொலையா? நரபலியா?

பண்ருட்டி அருகே கோட்லம்பாக்கம் ஏரிக்கரையில், ஒரு மனித மண்டை ஓடு எரிக்கப்பட்டதை பார்த்து அந்த ஊர் மக்கள் பதறியுள்ளனர்.

ஏரிக்கரையில் எரிக்கப்பட்ட மண்டை ஓடு... கொலையா? நரபலியா?

கடலூர் | பண்ருட்டி அடுத்துள்ள கோட்லாம்பாக்கம் ஏரியில் அடர்ந்த பனை மரத்தின் கீழ் மனித மண்டை ஓடு ஒன்று எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாமரைக்கண்ணன் அப்பகுதி மக்கள் உடனடியாக புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற புதுப்பேட்டை போலீசார் மண்டை ஓட்டை கைப்பற்றி கொலை செய்யப்பட்டதா? அல்லது நரபலி கொடுக்கப்பட்டதா? என்கிற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் தடைய அறிவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக புதுப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கோட்லாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சங்கர் (42) என்பவரது வீட்டின் எதிரில் அதிகாலையில் யாரோ மர்ம நபர்கள் மண்டை ஓட்டை வீசி சென்று உள்ளனர். அதனை எடுத்து தீயிட்டு கொளுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மிக்கு மீண்டும் ஒரு உயிர் பலி...!!!