பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து - 50 பேர் பலி...

பாகிஸ்தானில் பாலத்தின் தூண் மீது பேருந்து ஒன்று மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.

பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து - 50 பேர் பலி...

பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு 48 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது வளைவில் திரும்பும் போது பாலத்தின் தூண் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், எஞ்சியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | மலையிலிருந்து கவிழ்ந்த பேருந்து....