ஸ்டேஷனிலிருந்து தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி... அரை மணிநேரத்தில் வளைத்துப் பிடித்த போலீஸ்...

முசிரி காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய கஞ்சா வியாபாரியை அரை மணி நேரத்தில் மீண்டும் தேடிப் பிடித்த போலீசார்.

ஸ்டேஷனிலிருந்து தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி... அரை மணிநேரத்தில் வளைத்துப் பிடித்த போலீஸ்...

திருச்சி மாவட்டம் முசிறி போலீசாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யபட்ட வாலிபர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

முசிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் போலீசாருடன் குளித்தலை முசிறியை இணைக்கும் பெரியார் பாலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

மேலும் விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பதும் முசிரி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அமர வைத்து இருந்தனர். அப்போது திடீரென வாலிபர் தினேஷ்குமார் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். உடனடியாக மற்ற போலீசாருக்கு இதுகுறித்து  தகவல் தெரிவிக்கப்பட்டது.

களத்தில் இறங்கிய போலீஸார் முசிறி நகரின் பல்வேறு இடங்களில் வாலிபர் தினேஷை தேடி அலைந்தனர். அப்போது கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் தினேஷ்குமார். முசிரி அந்தர பட்டி பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீசார் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபரை அரைமணி நேரத்தில் மீண்டும் போலீசார் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.