திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா பதுக்கல்... 4 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது...

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா பதுக்கி, விற்பனையில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா பதுக்கல்... 4 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது...
Published on
Updated on
1 min read

திருச்சிராப்பள்ளி  மாவட்டம், ராம்ஜிநகர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதை தடுப்பதற்காக, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் ராம்ஜிநகர் பகுதிக்குட்பட்ட ஹரிபாஸ்கர் காலனி, நியூகாட்டூர் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மில்காலனியைச் சேர்ந்த மதன்(33) மற்றும் 3 ஆண்கள், 4 பெண்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைதுசெய்து வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 5கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 3 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுபோன்ற சட்டவிரோத செய்கைகளான மணல் திருட்டு, லாட்டரி விற்பனை, சூதாட்டம், மற்றும் சில்லறை மதுவிற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com