10க்கும் மேற்பட்ட வீடுகளில் செல்போன் திருட்டு - போலீசார் விசாரணை ...

விழுப்புரத்தில் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட வீடுகளில் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
10க்கும் மேற்பட்ட வீடுகளில் செல்போன் திருட்டு - போலீசார் விசாரணை ...
Published on
Updated on
1 min read

விழுப்புரம் | திண்டிவனம் கிடங்கள் - 2 பகுதியில் உள்ள ராஜன் தெரு, கலைஞர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஹரிதாஸ், பார்த்திபன், ஐயப்பன், தேவா, கணேஷ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரின் வீடுகளில், வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பதை சாதகமாக பயன்படுத்தி சுமார் 15-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.

பின்பு இது குறித்து உணர்ந்த பொதுமக்கள் வெளியில் வந்து மர்ம நபர்களை தேடிய நிலையில், அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது தெரியவந்தது .
இது குறித்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளின்  அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனத்தின் மையப் பகுதியில் ஒரே இரவில்.பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த 15 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சத்தில் ஆக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com