செல்போன் கடையில் கைவரிசை: சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்  

செங்கல்பட்டில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடனை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்தனர்.

செல்போன் கடையில் கைவரிசை: சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்   

செங்கல்பட்டில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடனை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ஈஸ்வரன் கோவில் எதிரே மொபைல்ஸ் டாக்டர் என்ற செல்போன் கடை உள்ளது. இதில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் சென்னை நடுகுப்பம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்த காவல்துறை 40 ஆயிரம் மதிப்பிலான 3 செல்போன்களை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.