பல்லாவரம் அருகே மரம் வெட்டும் ரம்பம் கொண்டு கொடூரக்கொலை.. மனைவி, இரு பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை!!

சென்னை பல்லாவரம் அருகே மனைவி மற்றும் இரு குழந்தைகளை மரம் வெட்டும் ரம்பத்தால் அறுத்துக்கொலை செய்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் அருகே மரம் வெட்டும் ரம்பம் கொண்டு கொடூரக்கொலை.. மனைவி, இரு பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை!!

பொழிச்சநல்லூரில் பிரகாஷ் என்ற தனியார் நிறுவன ஊழியர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், தனது மனைவி காயத்ரி, 13 வயது மகள் நித்யஸ்ரீ, 8 வயது மகன் ஹரி கிருஷ்ணன் ஆகியோரை மரம் வெட்டும் ரம்பம் கொண்டு கழுத்தை அறுத்து பிரகாஷ் கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், தகவலறிந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அனைவரின் உடல்களையும் மீட்டனர்.

இந்நிலையில் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையால் கடன் தொல்லையால் பிரகாஷ் அவதிப்பட்டு வந்ததாகவும் இதுதொடர்பாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதால் பிரகாஷ் விபரீத முடிவெடுத்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.