இளைஞர்களின் ஆபாச வீடியோவை பதிவு செய்து மிரட்டி பணம் பறித்த வந்த ஃபேக் ஐடி மன்னன் கைது!!..

திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெருமந்தூர் அருகே இளைஞரின் நிர்வாண புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்து வந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

இளைஞர்களின் ஆபாச வீடியோவை பதிவு செய்து மிரட்டி பணம் பறித்த வந்த ஃபேக் ஐடி மன்னன் கைது!!..

ராணிப்பேட்டை மாவட்டம் தெக்கால் அருகே உள்ள புளியங்கன்னு கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான நரேந்திரன் அப்பகுதியில் உள்ள தனியார் கிருஷ்ணா கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். இவர் முகநூலில் இளைஞர்களிடம்  சேட்  செய்து அவர்களின் தொலைபேசி எண்ணை பெற்று அவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புவார் அந்த குறுஞ்செய்தியை அவர்கள் கிளிக் செய்ததும் அவர்களது செல்போன் உள்ள புகைப்படம் வீடியோ தொலைபேசி எண்கள், இமெயில் ஐடி என  முழுவதையும் அக் செய்து விடுவது வழக்கம்.

 இதுபோன்று  50க்கும் மேற்பட்ட இளைஞர்களின் செல்போன்களை ஹாக் செய்து. விடுவார் இவர் 15 க்கும் மேற்ப்பட்ட  போலியான இமெயில் ஐடி களையும். 5 மேற்ப்பட்ட வாட்ஸ்ஆப் பை பயன்படுத்தி வந்துள்ளான். மேலும் இளைஞர்களிடம் பெண்கள் சேட்  செய்வது போல் செய்து இணையதளத்தில் உள்ள பெண்களின் ஆபாச வீடியோக்களை வீடியோகால் மூலம் காண்பித்து தன்னைப் பெண் என நம்பவைத்து அதேபோல் அந்த

இளைஞர்களை நிர்வாணமாக வீடியோ காலில் வரவழைத்து அதைப் பதிவு செய்து கொண்டு  கடந்த 2 ஆண்டுகளில் உறவினர்களுக்கு அந்த நிர்வாண வீடியோவை அனுப்பி விடுவேன் என  80 ஆயிரம் ரூபாய்க்கு மேல்  மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான்.

இதேபோல் திருவள்ளூர் பட்டரை பெருமந்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கிக்கொண்டு தவித்து வந்த நிலையில் அந்நபர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்  அவர்களிடம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை செய்ததில் வீடியோ காலில் பெண்கள் பேசுவது போல் பேசி அவர்களின் நிர்வாண வீடியோக்களை பதிவு செய்து மிரட்டி பணம் பறித்து வந்தது ஒப்புக் கொண்டுள்ளான் அதனை தொடர்ந்து நரேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர் ஆண்களைக் குறிவைத்து வீடியோ காலில் பெண்ணிடம் பேசுவது போல் தோற்றத்தை ஏற்படுத்தி ஆண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.