பச்சைப்பாஸ் பசங்க போட்ட உயிர் பிச்சையில் வாழ மாட்டேன்... ஆடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி மாணவர்...

பச்சைப்பாஸ் பசங்க போட்ட உயிர் பிச்சையில் வாழ மாட்டேன்... ஆடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி மாணவர்...

ராகிங் தொல்லையால் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா குருவராஜப்பேட்டை சேர்ந்தவர் குமார். இவர் மாநிலக் கல்லூரியில் முதுகலை வரலாறு துறையில் முதலாமாண்டு படித்து வருகின்றார். குமார் வழக்கம்போல் நேற்று காலை கல்லூரிக்கு சென்று விட்டு பிற்பகல் புறநகர் ரயிலில் மூலம் வீட்டுக்கு திரும்பியுள்ளார். திருநின்றவூர் அருகே வரும்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சில குமார் மற்றும் நவின் ஆகிய இருவரை  பிடித்து சென்று கேலி செய்து அடித்து அவமானம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் நவின் ரயில் வரவே  அவர்களிடமிருந்து தப்பி சென்றுள்ளான். இதனால் குமார் சக மாணவர்களுக்கு ஆடியோ ஒன்றை பதிவு, அதில் பச்சைப்பாஸ் பசங்க கொடுத்த உயிர் பிச்சை உயிரால என்னால வாழ முடியாது மச்சான், நான் செத்துடறேன். என்னை தப்பா நினைக்காத. யாரும் என்னை தப்பா நெனைக்காதீங்க. எங்க ஃபேமிலி, எங்க அம்மா, அப்பா யாரும் என்னை தப்பா நெனைக்காதீங்க என்று சொல்லிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார். வேறு ஒரு ஆடியோவில், ஒரு மாணவர் உங்க பிஜி படிக்கிற மாணவர் மாட்டிக் கொண்டிருக்கிறார், யாராவது வந்து கூப்பிட்டு போங்கன்னு பேசியுள்ளது தெரிய வந்துள்ளது.

தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் பிரேதத்தை மீட்டு திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஒன்றுகூடி குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க போவதில்லை என சக கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவம் கல்லூரி மருத்துவமனையில் முற்றுகையிட்டனர்.

மருத்துவமனையில் மாணவர்கள் அதிகளவு கூடியதால்  பாதுகாப்பு பணியில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் திருவள்ளூர் நகர காவல்துறையினர் 20க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பாக காணப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com