கல்லூரி மாணவி வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு...

மதுரை அருகே வீட்டின் குளியல் அறையில் எரிந்த நிலையில் கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவி வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு...

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு கார்த்திகா என்ற மகள் உள்ளார். இவர் அதேபகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இதற்கிடையில் இன்று கண்ணன்  வீட்டின் குளியல் அறையில் இருந்து தீப்பிடித்து கருகிய வாசனை எழுந்ததாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கண்ணினின் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர்.

பதற்றமடைந்த வீட்டில் உள்ளவர்கள் குளியல் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மாணவி கார்த்திகா உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் காவல்நிலைய போலீசார், கருகிய நிலையில் இருந்த மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், மாணவி கார்த்திகா தற்கொலைக்கு முயன்றாரா?அல்லது எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.