தாராபுரம் பகுதியில் தொடரும் மணல்திருட்டு... நடவடிக்கை எடுக்க கோரும் பொதுமக்கள்...

தாராபுரம் பகுதியில் இரவு நேரங்களில் கிராவல் மண் திருட்டுத்தனமாக விற்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் பகுதியில் தொடரும் மணல்திருட்டு... நடவடிக்கை எடுக்க கோரும் பொதுமக்கள்...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பஞ்சப்பட்டி கிராவல் மண் இரவு நேரங்களில் தோட்டங்களில் உள்ள கிராவல் மண்ணை அரசு அனுமதியின்றி மணலை  திருட்டுத்தனமாக விற்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 12.30 மணியளவில் தாராபுரம் வட்டாட்சியருக்கு பஞ்சப்பட்டி கிராமத்தில் அதிகளவு மணல் திருடப்பட்டு கனரக வாகனம், லாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்லப்படுவதாக புகார். தகவலின்படி தாராபுரம் பஞ்சப்பட்டி யில் மறைவான இடத்தில் இருந்து அவ்வழியாகச் சென்ற ஒரு டிப்பர் வாகனத்தில் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் பஞ்சப்பட்டி இலிருந்து தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் வரை துரத்திச் சென்று டிப்பர் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முயன்றபோது வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடினார்.

பின்னர் அந்த வாகனத்தை வட்டாட்சியர் சைலஜா கைப்பற்றி வாகனத்தை தாராபுரம் வட்டாட்சியர் வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த பொழுது அதே பகுதியில் தொடர்ந்து ஆறு  மாதங்களாக இரவு நேரங்களில்  கிராவல் மண்  கடத்தி விற்று வந்தது தெரியவந்தது. அதன் உரிமையாளர் கன்னியப்பன் தொடர்ந்து 2 டிப்பர் லாரிகளை வைத்து தினமும் கிராவல் மண் கடத்தி வருவதாக பொதுமக்கள்  தெரிவித்தனர். 
தொடர்ந்து மற்றொரு லாரியும் பிடிக்காவிட்டால் தொடர்ந்து இரவு நேரங்களில் மணல் கடத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பெண் தாசில்தார் சைலஜா துரத்திச் சென்று மணல் லாரியை கைப்பற்றியதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் அவரை பாராட்டினார்.