ஊழல் புகார் எதிரொலி; புழல் சிறை மருத்துவர் மாற்றம்!

Published on
Updated on
1 min read

புழல் மத்திய சிறையில் மருத்துவராக பணியாற்றி வந்த கீர்த்திவாசன் தொடர் புகார்களின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். திடீரென இதயநோயால் பாதிக்கப்பட்ட ராஜேஷூக்கு வெளி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்த நிலையில் திடீரென அவர் மாரடைப்பால் உரிழந்தார். 

ஏற்கனவே புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு மருத்துவம் பார்க்க 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில் புழல் மத்திய சிறையில் மருத்துவராக பணியாற்றி வந்த கீர்த்தி வாசன் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, சிறையில் ரவி, லாவண்யா என்ற இரண்டு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com