குழந்தை வரம் வேண்டி...சாமியாரிடம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...!

குழந்தை வரம் வேண்டி...சாமியாரிடம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...!

Published on

கோவை அருகே குழந்தை வரம் வேண்டி சாமியாரிடம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த நேத்ராவதி -கார்த்திக் லட்சுமி நாராயணன் தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. அதனைதொடர்ந்து கணவன் மனைவி இருவரும் பெங்களூரில் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை எடுத்தும் கரு கலைந்து போனதால், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபுதாநந்தா சாமியார் ஆசிரமத்திற்கு சென்று அவர் கூறிய பூஜைகளை செய்துவந்துள்ளனர். 

இந்நிலையில் சாமியார், நேத்ராவதியை தொடர்பு கொண்டு தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் உங்கள் இருவரையும் பிரித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

அதைகேட்டு அதிர்ச்சியடைந்த நேத்ராவதி, இது குறித்து தனது கணவரிடம் கூற, அதற்கு அவர் சாமியாரின் ஆசையை நிறைவேற்ற கூறி மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து நேத்ராவதி தனது கணவன் மற்றும் சாமியார் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், குழந்தை வரம் வேண்டி சாமியாரிடம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com