கடலூர்: ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை!!

கடலூர்: ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுராமன் வயது 35. இவர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் விடுப்பில் செல்ல தனது சொந்த ஊரான கண்டமங்கலம் வந்து தங்கியிருந்தார். இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில், அடிக்கடி கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே நேற்று மாலை 3 மணிவரை ரகுராமன் வீட்டில் சாப்பிடாததால் அதைப் பார்த்த அவரது தந்தை ராஜேந்திரன் (வயது 67) ராகுராமனை சாப்பிட அழைக்க வந்துள்ளார்.

அப்போது ரகுராமன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் காட்டுமன்னார் கோவில் போலீசார் தகவல் கொடுத்தார். அதன்பேரில்.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.