நடுரோட்டில் பட்டக்கத்தியில் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... குண்டர் சட்டத்தில் அள்ளிய போலீஸ்..

நடுரோட்டில் பட்டாகத்தியில் கேக் வெட்டியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
நடுரோட்டில் பட்டக்கத்தியில் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... குண்டர் சட்டத்தில் அள்ளிய போலீஸ்..
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஜெகதாபட்டினத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (26) இவர் கடந்த 5ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு, ஜெகதாபட்டினம் கிழக்கு கடற்க்கரை சாலையில் நண்பர்களுடன் பட்டாக்கத்தியை கொண்டு கேக் வெட்டி கொண்டாடி பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.

இதன் வீடியோ சமுக வளைதளத்தில் வைரலாக பரவி வந்தது. தகவலறிந்த ஜெகதாபட்டினம் காவல்த்துறையினர் கடந்த 7ம் தேதி வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி அலெக்ஸ் பாண்டியன் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பெயரில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உத்தரவுபடி, குற்றவாளி அலெக்ஸ்பாண்டியன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி, நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com