கொடை விழாவில் நடனம்: தட்டிக் கேட்ட திமுக பிரமுகர் குத்திக் கொலை!  

தூத்துக்குடி அருகே கோவில் கொடை விழாவில் நடனமாடியதை தட்டிக்கேட்ட திமுக வட்ட செயலாளர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் திமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள முனியசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இந்த விழாவில் மது அருந்திவிட்டு நடனமாடியவர்களை நடராஜன் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த நபர்கள் நடராஜனை பின் தொடர்ந்து வந்து அவரது அலுவலகம் முன்பு வைத்து அவரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதிகாலையில் நடைபெற்ற இச்சம்வம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியை சேர்ந்த  அருண்குமார், அஜித்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள மாரிமுத்து, அந்தோணிசாமி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.