பானிபூரி சாப்பிட சென்ற சிறுமி...நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து சென்று போதை மருந்தை கொடுத்த இளைஞன்..அடுத்து நடந்தது என்ன?

13 வயது சிறுமிக்கு போதைப் பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த பல்மருத்துவக் கல்லூரி மாணவர் மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

பானிபூரி சாப்பிட சென்ற சிறுமி...நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து சென்று போதை மருந்தை கொடுத்த இளைஞன்..அடுத்து நடந்தது என்ன?

சென்னை ராமாபுரத்தில் பாட்டி துணையுடன் வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர் சற்று பதற்றத்துடன் வீட்டில் இருந்திருக்கிறார். அவரின் நிலையை பார்த்து பதைபதைத்த பாட்டி சிறுமியிடம் விசாரித்திருக்கிறார். முதலில் பயந்து கொண்டு எதுவும் பேசாமல் இருந்த சிறுமியிடம் தொடர்ந்து விசாரித்திருக்கிறார் பாட்டி. அப்போது அந்த சிறுமி சொன்ன தகவலால் சுக்குசூறாக உடைந்து போனார் பாட்டி.. 13 வயது சிறுமி என்றும் பாராமல் நான்கு மிருகங்கள் அந்த சிறுமியை சிதைத்திருக்கிறார்கள்... 

சிறுமி தனது வீட்டருகே உள்ள கடைக்குச் சென்று பானிபூரி சாப்பிடுவது வழக்கம். அப்படி போகும் போது அருகில் இருக்கும் கிரிஷ் என்கிற 20 வயது பல் மருத்துவக் கல்லூரி மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கத்தில் சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடியை வாங்கி தினமும் கிரிஷ் சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் சிறுமியை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற கிரிஷ் ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் அத்துமீறியிருக்கிறார். மறுத்த சிறுமியை மயக்கி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். 

வீட்டுக்கு வந்த சிறுமி பயத்துடன் இருந்துள்ளார். அப்போது அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட  கிரிஷின் நண்பர்களான சினிமா துணை நடிகர் சதீஷ் குமார், விஷால், தனியார் கல்லூரி பகுதிநேர உதவி பேராசிரியர் பிரசன்னா ஆகியோர், தாங்கள் கிரிஷின் நண்பர்கள் எனவும், கிரிஷ் உடன் சிறுமி நெருக்கமாக இருந்தது தங்களுக்கும் தெரியும் எனவும் கூறியுள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் சிறுமி கிரிஷ் உடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து சிறுமியை கிரிஷின் வீட்டிற்கு வரச்சொல்லி அவருக்கு ஹூட்கா என்னும் போதைப்பொருளை கொடுத்து சிறுமியிடம் அத்துமீறியிருக்கிறார்கள். நான்கு மிருகங்களும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். 

இந்த விபரங்களை அறிந்து உடைந்து போன பாட்டி இது தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார், பல்மருத்துவக் கல்லூரி மாணவர் கிரிஷ், சினிமா துணை நடிகர் சதீஷ்குமார், தனியார் கல்லூரி பகுதி நேர பேராசிரியர் பிரசன்னா மற்றும் விஷால்  ஆகிய நான்கு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மிருகங்களை குறை சொல்வதா? அல்லது 13 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை அனுமதித்த பாட்டியை குறை சொல்வதா எனத் தெரியவில்லை. வயதுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தைத் தான் வரவழைக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். ஆனாலும், தனி மனித ஒழுக்கம் இல்லாமல் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நான்கு பேரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.