சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுப்பத்தில் ஏற்பட்ட தகராறு...மதுபோதையில் நண்பர்களுக்குள் நடந்த மோதல்..ஒருவருக்கு கத்தி குத்து...

சென்னை அருகே பாஸ்ட்புட் கடையில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுப்பதில், ஏற்பட்ட மோதலில் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுப்பத்தில் ஏற்பட்ட தகராறு...மதுபோதையில் நண்பர்களுக்குள் நடந்த மோதல்..ஒருவருக்கு கத்தி குத்து...

சென்னை அடுத்த வியாசர்பாடி பி.வி.காலனி தெருவை சேர்ந்தவர் விஜய். 25 வயதான இவர், நேற்றிரவு அதேபகுதியில் உள்ள பாஸ்புட் கடையில் உணவு அருந்த சென்றதாக கூறப்படுகிறது. இவருடன் இவரது நண்பர்களான கோபாலகிருஷ்ணன், மணி ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.

மதுபோதையில் இருந்த மூவரும் கடையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பின்னர் மூவரும் சாப்பிட்டதற்கான பணத்தை யார் கொடுப்பது என்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாய் தகராறு மோதலாக உருவெடுத்துள்ளது. அப்போது கோபத்தில் உச்சிக்கே சென்ற கோபாலகிருஷ்ணன், மணி ஆகிய இருவரும் கடையில் இருந்த கத்தியை எடுத்து விஜயை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதில் விஜயின் இடது கை, மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுநிலையில், சிறுது நேரத்தில் அங்கேயே அவர் மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்.கே.பி போலீசார், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த விஜயை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், விஜயை கத்தியால் தாக்கிய, அவருடைய நண்பர்களான கோபாலகிருஷ்ணன், மணி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.