
மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்று வருவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து எஸ் எஸ் காலனி போலீசார், தீவிர சோதனை நடத்தியதன் அடிப்படையில் எஸ் எஸ் காலனி மற்றும் அதை சுற்றி உள்ள பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்று வந்ததாக தெரிய வந்தது. அதையடுத்து சீருடை இன்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் போதை மாத்திரைகளோடு மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த மாத்திரைகளை அவர்கள் எங்கிருந்து வாங்குகின்றனர், இதுவரை எத்தனை மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர் போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.