மது போதையில் மருத்துவம் பார்த்த பல் மருத்துவர்!!

Published on
Updated on
1 min read

பல் மருத்துவர் ஒருவர், மது அருந்திவிட்டு போதையில் மருத்துவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு மது போதையிலேயே நோயாளிகளுக்கு பல் சம்பந்தமான மருத்துவம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில்  இவரிடம் பல் வலியின் காரணமாக பல்லை பிடுங்குவதற்காக நோயாளி ஒருவர்  சென்றுள்ளார். அப்போது மருத்துவர் மது போதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நோயாளி
மது அருந்தி விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா என்று கேட்டுள்ளார். 

மது அருந்தியதை ஒப்பு கொண்ட பல் மருத்துவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை 5 நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்றும் மருத்துவர் சிகிச்சை பார்ப்பதிலேயே குறியாக  இருந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அந்த நோயாளி வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதலங்களில்  வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் கடையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களிடையே பெரும்  பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com