விசாரிக்க சென்ற காவலரை தாக்கிய 'குடிமகன்'... போதை வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு...

Drug addict புதுச்சேரியில் விபத்து நடந்த இடத்தில் விசாரிக்க சென்ற காவலரை குடி போதையில் வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது மேலும் இச்சம்பவம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து காவலரை தாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர்.assaulting a police officer who went to investigate

விசாரிக்க சென்ற காவலரை தாக்கிய 'குடிமகன்'... போதை வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு...

புதுச்சேரி மங்களம் பகுதியை சேர்ந்தவர் வினாயகம் (33) இவர் வில்லயனூர் மேற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபரிந்து வருகின்றார். இவர் இன்று இரவு புதுச்சேரி விழுப்புரம் மாவட்டம் எல்லை பகுதியான மதகடிப்பட்டில் பணியில் இருந்த போது அங்கு ஒரு டாடா ஏஸ்ஸும் இருசக்கர  வாகனமும் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்து குறித்து விசாரணை செய்து வந்துள்ளார்  அப்போது விபத்துகுள்ளான இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களும்  குடிபோதையில் இருந்தது தெரியவந்தது, மேலும் அங்கு விபத்துக்குள்ளான வாகனத்தை காவலர் விநாயகம் புகைப்படம் எடுக்க முயன்ற போது அவரை மறித்த அந்த வாலிபர்கள்  காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது செல்ஃபோனை பறிக்க முயன்று, பின்னர் சராமாரியாக தாக்கியுள்ளனர்.

காவலரை தாக்குவதை  அப்பகுதியில் இருந்த பொது மக்கள் தங்களின் செல்ஃபோனில் வீடியோ எடுத்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இச்சம்பவம் குறித்து போக்குவரத்து காவலர் விநாயகம் திருபுவனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  விபத்துகுள்ளான இருசக்கர வாகனத்தில் வந்த தன்ராஜ் (40) என்பவரை  கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் எல். ஆர். பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இதில் தன்ராஜ் உடன் வந்த வினோத் என்கிற வாலிபர் தான் போக்குவரத்து காவலரை தாக்கினர் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த திருபுவனை போலிசார் காவலரை தாக்கிவிட்டு தலைமறைவான வினோத்தை  தீவிரமாக தேடி வருகின்றனர்.