சென்னை சென்ட்ரலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்...!!

சென்னை சென்ட்ரலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்...!!

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் படி தமிழக முழுதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களையும், கடத்துபவர்களையும் கண்காணித்து கைது செய்து தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அதே போன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வாளர் சசிகலா தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்ட போது டெல்லியில் இருந்து வந்த கிராண்ட் ட்ரங்க் விரைவு ரயிலில் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது ஒருவருடைய பையில் மட்டும் 10 கிலோ கஞ்சா இருந்ததை அறிந்த போலீசார் உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்துக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் கேரள மாநிலம் மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் வயது 49 என்பது தெரியவந்தது.  மேலும் இவர் கஞ்சாவை சென்னையில் உள்ள அவருடைய நண்பரிடம் சேர்ப்பதற்காக வந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் வழக்கமான சோதனையில் சிக்கிக் கொண்ட அப்துல் காதரை போலீசார் அவரிடம்  இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க:   புள்ளிங்கோக்களுக்கு போலீஸ் கட்டிங் செய்த ஆசிரியர்...!!!