குடிபோதையில் கார் ஓட்டி வந்து அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதல்

சென்னையில்,  குடிபோதையில் காரை ஓட்டி சென்ற நபர், அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

குடிபோதையில் கார் ஓட்டி வந்து அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதல்

சென்னையில்,  குடிபோதையில் காரை ஓட்டி சென்ற நபர், அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

எழும்பூரை சேர்ந்த வில்சன் என்பவர், நேற்று தனது மகள்கள், மகள்களின் தோழி ஆகியோருடன்  காசா மேஜர் சாலை வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக தாறுமாறாக வந்த சொகுசு கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற ஆட்டோ, டூவீலர், நானோ கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் வில்சனுக்கு மார்பு பகுதியில் காயம் மற்றும் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 பேருக்கு பலத்த காயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, விபத்து ஏற்படுத்திய நபரிடம் விசாரித்தனர். அப்போது அவர் அண்ணாநகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பதும், அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்துள்ள போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.