குடிபோதையில் சாலையில் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி அட்டூழியம்...

சென்னை அருகே குடிபோதையில் வாகனங்களை அடித்து உடைத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் சாலையில் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி அட்டூழியம்...
Published on
Updated on
1 min read

சென்னை ஓட்டேரி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை மர்மநபர்கள் 2 பேர் கத்தியால் உடைத்து தகராறில் ஈடுபடுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை கண்டதும் கண்டதும் மர்மநபர்கள் இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் அந்தபகுதியில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனம் ஒரு கார் ,ஆட்டோ மற்றும் ஒரு மினி வேன் உள்ளிட்ட வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகள் மற்றும் சீட் கவர் உள்ளிட்டவை சேதம் அடைந்தை பார்வையிட்டனர்.

இது குறித்து போலீசார் விசாரணை செய்த போலீசார், அந்தபகுதியில் பொருத்திவைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் பெரம்பூர் வீரபாண்டியன் பகுதியை சேர்ந்த அர்ஜூன் மற்றும் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரும் வாகனங்களை அடித்து நொறுக்கியது பதிவாகியிருந்தது.

இருவரையும் இன்று காலை ஓட்டேரி மேம்பாலம் அருகே வைத்து போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நேற்று தீபாவளி என்பதால் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மது போதையில் வாகனங்களை அடித்து உடைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார்,அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com